நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதியாம்

Mahinda Rajapaksa Sonnalum Kuttram Ramanathan Archchuna
By Dharu Sep 13, 2026 12:11 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என யாழ். மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மகா ஜன பேரணியில்  (Janasatana Rally) அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் மத்தியில், முற்றிலும் சிங்கள மொழியிலேயே தனது உரையை நிகழ்த்திய அர்ச்சுனா, டயஸ்போரா நிதி விவகாரம், இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல கதைகளை பகிர்ந்து கொண்டார்.

மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் தேடப்படும் பல நபர்கள் : ஜனாதிபதி அனுர பரபரப்பு தகவல்

மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் தேடப்படும் பல நபர்கள் : ஜனாதிபதி அனுர பரபரப்பு தகவல்

வடக்கின் அரசியல்

மேடையில் உரையைத் தொடங்கிய அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தில் தேர்தல்களின் போது பின்னணியில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுகிறது என சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்

"யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் அரசியல் செய்யும் பலருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் (Tamil Diaspora), தமிழ் சமூகத்தினரும்தான் தேர்தல்களை இலக்கு வைத்து கோடிக்கணக்கான நிதியை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அனுப்புகிறார்கள்.

தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தலைவராக உருவாக்குவதற்காக பல பில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.

ஆனால் தற்போது தமிழ் மக்களே தங்களது முடிவு குறித்து வருந்துகின்றனர். நான் எனது தமிழ் மக்களினதும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினதும் செய்தியை எடுத்துக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.

சிங்கள மக்களுடன் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும், அநுர குமார திசாநாயக்கவினால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், இதனை அனைத்து சிங்கள மக்களிடமும் தெரிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கும் வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.

“காட்டில் சிங்கத்திற்கும் எல்லை உண்டு, புலிக்கும் எல்லை உண்டு. தேசியக் கொடியில் சிங்கம் இருக்கிறது, வடக்கில் புலியை அடையாளமாகக் காட்டினார்கள். ஆனால், காடு என்று வரும்போது இரண்டும் ஒரே காட்டிற்குள்தான் வாழ வேண்டும்.

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

நாமல் ராஜபக்சவிற்கு நன்றி

அதேபோல, இந்த இலங்கை என்கிற தேசத்திற்குள் சிங்கங்களாகிய சிங்கள மக்களும் புலிகளாகிய தமிழ் மக்களும் பிரிந்து மோதாமல், ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இரு சமூகங்களும் கைகோர்க்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே இந்த இரு சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும்.

ஒருபோதும் எனக்கு தமிழீழம் தேவையில்லை. எனக்கு வேண்டியது சிங்கள மக்களே. நான் மரணிக்கும் வரைக்கும் தமிழீழத்தை கோரப்போவதில்லை.

மேடையில் தன்னை வடக்கின் எதிர்காலத் தலைவர் என அறிமுகப்படுத்தியமைக்காக நாமல் ராஜபக்சவிற்கு நன்றி. நாமலிடம் நான் ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளேன்.நாமல் ஜனாதிபயானால் அவரின் வாகனத்துக்கு சாரதிகாக வருவதாக கூறியுள்ளேன்.

அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது. வைத்தியராக இருந்த காலத்தில் எனக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை.

ஆனால் இந்த கொத்தமல்லி ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு எதிராக அதிக வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். 29 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

சட்டம் என்பது ஏழைக்கும் அரசியல்வாதிக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

பேராசிரியர் ரகுராம் தொடுத்த வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

பேராசிரியர் ரகுராம் தொடுத்த வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

அநுரவுக்கு பில்லியன் டொலர் உதவி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்குள் செல்வதற்கு அஞ்சுகின்றனர். அங்கு தாங்கள் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் அவர்களிடத்தில் இருக்கிறது.

சில நேரங்களில் ஒரு பொது சுகாதார பரிசோதகர் (PHI) சபாநாயகருக்கு உணவு ஊட்டுகிறார். அல்லது அதற்கு நேர்மாறாக நடக்கிறது.

அவரது அறைக்குள் சென்றால் நாம் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.

அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளீர்கள். ஆனால் அவர் ஒரு தந்திரமான நரி. ” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018