அரசாங்கத்தை நம்பி ஏமாற்றமடைந்த அர்ச்சுனா! சபையில் கிண்டல்
தகரங்கள் கழன்றிருந்தால் 20 இலட்சம் ரூபா வழங்குவதாக கூறினார்கள், அது உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதனால் அரசாங்கத்தின் கூற்றை நம்பி நானும் இரண்டு தகடுகளை கழற்றினேன் என அவர் கூறியுள்ளார்.
மேலும், அவ்வாறு பணம் கிடைக்காதாம் என்றும் தகரம் மட்டுமல்ல உள்ளாடை வாங்கவும் பணமில்லாத நிலைமையே உள்ளது எனவும் நாடாளுமன்றில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் கருத்து
இது தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், நான் தமிழன், இந்து ஆனால் கையில் அஸ்கிரிய பீடத்தாலும், மகாநாயக்க தேரர்களாலும் கட்டிய நூல்கள் கையில் உள்ளன.
நான் மகாநாயக்க தேரர்களை சந்தித்திருந்தேன். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கியிருந்தேன்.
இதன்போது இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் என்றே அவர்கள் பதிலளித்தனர். அரசாங்கம் தமிழ், சிங்கள மக்களுக்கு வேண்டாமென்றாகிவிட்டது.
இதேவேளை தகரங்கள் கழன்றிருந்தால் 20இலட்சம் ரூபா வழங்குவதாக கூறினார்கள். அதனை நம்பி நானும் இரண்டு தகடுகளை கழற்றினேன்.
அவ்வாறு பணம் கிடைக்காதாம். தகரம் மட்டுமல்ல உள்ளாடை வாங்கவும் பணமில்லாத நிலைமையே உள்ளது.
உங்களுக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலைமையே உள்ளது. நான் தமிழன். எந்தவொரு சிங்களவரும் என்னை கொல்ல மாட்டார்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |