மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் பாரிய விபத்து!
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் பாரிய விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்து நேற்று இரவு(19.12.2025) ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பகுதியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான் செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த சாரதி
வான் விபத்தில் சிக்கிய சந்தர்ப்பத்தில் சாரதி மட்டுமே பயணித்துள்ளதோடு விபத்தில் காயமடைந்த சாரதி நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவிலருகின்ற இந்நிலையில் இவ்விபத்தில் குறித்த வான் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இதேவேளை ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |