அடிப்படை அறிவு இல்லாத யாழ். NPP எம்பிக்கள் - சபையில் அர்ச்சுனா கேலி
அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களையே யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக என்.பி.பி.அரசாங்கம் வைத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “உணவு , உடை, உறையுள் என்ப னவே அடிப்படை தேவைகள் என்பது தரம் ஒன்று மாணவருக்குக் கூட தெரியும்.
நாம் பொங்கல் கேட்கவில்லை
ஆனால் உணவு, உறையுள், வீடு என ஜனாதிபதியின் மேடையில் இருந்து கொண்டு என்.பி.பி உறுப்பினர் ஒருவர் சொல்கின்றார்.

இப்படியானவர்களையே யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பிக்களாக என்.பி.பி. அரசாங்கம் வைத்துக் கொண்டுள்ளது.
உணவு. உடை. உறையுள் என்பதைக் கூட சரியாகச் சொல்ல முடியாதவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து பொங்கல் வழங்கி விட்டுச் சென்றுள்ளார். நாம் பொங்கல் கேட்கவில்லை.
அரசியல் கைதிகளை விடுதலை
வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை விடுவியுங்கள்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்துங்கள். ஆனந்த சுதாகரன் போன்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்றே நாம் கேட்கிறோம்.
இவற்றைச் செய்யாமல் பொங்கல் வழங்கி என்ன பயன்?என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |