ஒட்டுமொத்த நாடாளுமன்றத்திற்கும் நிலையியல் கட்டளை சட்டத்தைக் கற்பித்தேன்! அர்ச்சுனா வெளிப்படை
உங்களில் ஒருவனாக இருந்தவன் இன்று ஒட்டுமொத்த நாடாளுமன்றத்திற்கும் நிலையியல் கட்டளை சட்டத்தை தனி ஒருவனாக படிப்பித்துக் கொண்டிருக்கிறேன் என நாடாளுமனற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
நேற்றைய (06.08.2025) நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் தனது முகநூல் பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த வீரத்தைத் தந்த என் தேசியத் தலைவனுக்கு இவை சமர்ப்பணம் ஆகட்டும். நாடாளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தை இயற்றியவர்களுக்கு அவற்றை படிப்பித்துக் கொண்டிருக்கிறேன். இது தமிழனின் வரலாறாகட்டும்.
தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம்
அதனால் தான் இன்று தேசபந்து தென்ன கோனை வெளியேற்றும் அரசியல் நாடகத்திற்கு, சார்பாகவோ எதிராகவோ நான் வாக்கிடவில்லை. நடுநிலையாக இருந்தேன்.
இன்றைய அமர்வு நாடாளுமன்ற நிலைகள் கட்டளை சட்டங்களுக்கு முரணானதாகவும் தனிப்பட்ட அரசியல் பலி(ழி) வாங்கலுக்கு பாதிப்பானதாகவும் நான் கருதுகிறேன்.
ஒரு இனம் தன் நிலத்தையும் தன் கலாசாரத்தையும் தன் விழுமியங்களையும் தன் வரலாறுகளையும் இழந்து நிற்கின்ற போது எவன் ஒருவன் தன் இனத்தின் எதிர்காலத்தை மட்டும் சிந்தித்து செயலாற்றுவானோ அவனே அந்த இனத்துக்குரியவனாகிறான்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா
