சபையில் தேசிய தலைவர் பெயரை உரத்துக் கூறி சந்திரசேகருக்கு சவால் விடுத்த அர்ச்சுனா!
யாழ்ப்பாணத்தில் பிறந்து வள்வெட்டித்துறையில் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரை பார்த்து வளரந்தவன் என்ற ரீதியில் அமைச்சர் சந்திரசேகருக்கு ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அதன்போது, தாங்கள் சர்க்கஸ் கூடாராம் வைத்தாலும் அங்கே கழுதைகள் குதிரைகள் வந்து நின்றாலும் அவற்றுடன் புகைப்படம் எடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் ஆனால் அவ்வாறான கழுதைகளை தங்களுடைய தலைவர்களாக யாழ்.மண்ணில் பிறந்த எந்த தமிழனனும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திலே பிறக்காத அமைச்சர் சந்திரசேகரும் சில நேரம் நினைக்கலாம் சண்டித்தனம் செய்து தன்னை ஏதாவது செய்யலாம் என்று, 44 ஆயிரம் போராளிகளின் உயிர்களை கொடுத்த தேசிய தலைவரின் வழியில் நின்ற தன்னை எவ்வாறு விரட்டியடிக்க முடியும் என்றும் அர்ச்சுனா கேள்வியெழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |