இந்து, முஸ்லிம் வணக்கஸ்த்தலங்களை அபகரிப்பதற்கு உதவும் தொல்பொருள் திணைக்களம்: சுட்டிக்காட்டும் அமெரிக்க ஆணைக்குழு

Sri Lankan Tamils United States of America Eastern Province Northern Province of Sri Lanka
By Pavan Nov 02, 2023 09:20 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்கஸ்த்தலங்களைக் கைப்பற்றுவதற்கு தொல்பொருள் திணைக்களம் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களான ஸ்டீஃபன் ஸ்னெக் மற்றும் டேவிட் கெரி ஆகியோர் கடந்த மாதம் இலங்கைக்கு வருகைதந்திருந்தனர்.

அவர்கள், கொழும்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு மத சுதந்திரம் தொடர்பில் நிலவும் கரிசனைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

அதுமாத்திரமன்றி சர்வமதத்தலைவர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களையும் முன்னெடுத்திருந்தனர்.

குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்: பொதுமக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்

குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்: பொதுமக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்

மத சுதந்திரம் சார்ந்த பிரச்சினைகள்

அதன்படி, இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஆணையாளர் ஸ்டீஃபன் ஸ்னெக்,

'இலங்கையில் நிலவும் மத சுதந்திரம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் அரசாங்க அதிகாரிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாட முடிந்தமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்' என்று தெரிவித்துள்ளார்.

இந்து, முஸ்லிம் வணக்கஸ்த்தலங்களை அபகரிப்பதற்கு உதவும் தொல்பொருள் திணைக்களம்: சுட்டிக்காட்டும் அமெரிக்க ஆணைக்குழு | Archeology To Take Over Hindu And Muslim Shrines

அதேவேளை, பல்வேறு மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்கள் ஒன்றிணைந்து கீழ்மட்டத்திலிருந்து பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுத்தாலும் கூட, நாட்டில் வாழும் சிறுபான்மையின இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான மீயுயர் மத சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கமானது தற்போது நடைமுறையிலுள்ள 'ஒடுக்குமுறை' கொள்கைகள் மற்றும் சட்டங்களை முற்றாக நீக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெறுமதிசேர் வரி அதிகரிப்பு : நாமல் வெளியிட்ட கருத்து

பெறுமதிசேர் வரி அதிகரிப்பு : நாமல் வெளியிட்ட கருத்து

அரசாங்க அதிகாரிகளின் அச்சுறுத்தல்

அதேபோன்று இலங்கை அரசாங்கம் மிகவும் மோசமான பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி மத சிறுபான்மையினரைத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பது குறித்து தாம் தொடர்ந்து தீவிர கரிசனை கொண்டிருப்பதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து, முஸ்லிம் வணக்கஸ்த்தலங்களை அபகரிப்பதற்கு உதவும் தொல்பொருள் திணைக்களம்: சுட்டிக்காட்டும் அமெரிக்க ஆணைக்குழு | Archeology To Take Over Hindu And Muslim Shrines

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் மத சிறுபான்மையினர் போன்றோர் அரசாங்க அதிகாரிகளின் தொடர் கண்காணிப்புக்களால் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

அதுமாத்திரமன்றி தொல்பொருள் திணைக்களமானது நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் அப்பிரதேசங்களிலுள்ள கட்டமைப்புக்கள் மற்றும் பௌத்த பிக்குகளுடன் இணைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதற்கு வசதியேற்படுத்திவருகின்றது' எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு பேரிடி: சம்பள உயர்வுக்கு புதிய திட்டம்

அரச ஊழியர்களுக்கு பேரிடி: சம்பள உயர்வுக்கு புதிய திட்டம்

நிச்சயமான தீர்வு

அதேவேளை, சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் மற்றுமொரு ஆணையாளரான டேவிட் கெரி இதுபற்றி பின்வருமாறு கருத்துரைத்துள்ளார்:

'குறிப்பாக தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுத்தலங்களை பதிவுசெய்வதில் நிலவும் சவால்களுக்கு அரசாங்கம் நிச்சயமாகத் தீர்வை வழங்கவேண்டும்.

இந்து, முஸ்லிம் வணக்கஸ்த்தலங்களை அபகரிப்பதற்கு உதவும் தொல்பொருள் திணைக்களம்: சுட்டிக்காட்டும் அமெரிக்க ஆணைக்குழு | Archeology To Take Over Hindu And Muslim Shrines

வெளிப்படைத்தன்மைவாய்ந்த பதிவு செயன்முறையை உறுதிப்படுத்தக்கூடியவாறான வழிகாட்டல்களை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அத்தோடு மட்டுமீறிய ஒடுக்குமுறைகள், கண்காணிப்புக்கள், வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வு பேச்சுக்கள் போன்றவை பற்றி முறையிடும் மத சிறுபான்மையினரைப் வலுவான பாதுகாப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்' என்று தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026