கட்சிக்குள்ளேயே சிறீதரனுக்கு சாணக்கியன் வைக்கும் செக் : அம்பலப்படுத்தும் அர்ச்சுனா
மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பில் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) கேள்வி எழுப்புவதற்கு காரணம் சிறீதரனின் (S. Shritharan) பெயர் அதில் சிக்கி வாக்களித்த மக்களிடையே அது சர்ச்சையை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்புத்தான் என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Archuna Ramanathan) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை அவரது உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஒருவருக்கொருவர் குத்தும் நடவடிக்கைதான் இது.
தமிழ்தேசியத்தில் அக்கறை
சாணக்கியன் தான் 60,000 வாக்குகள் பெற்றதாக சொல்லிக்கொண்டு இருக்கின்றார், கருணா மற்றும் பிள்ளையான் மீதான வெறுப்பே அவருக்கு வாக்குகள் கிடைக்க முழுமையான காரணம்.
இதனால் உங்களுக்கு தமிழ்தேசியத்தில் அக்கறை இருப்பதாக ஒத்துகொள்ள முடியாது அத்தோடு, தமிழரசுக்கட்சிக்குள் பாரிய அரசியல் காணப்படுகின்றது.
கூட்டத்தை கூட்டி இடைவேளை நேரங்களில் முடிவுகள் எடுக்கப்படும் அளவிற்குத்தான் தற்போது கட்சி நிலமை உள்ளது.
தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் நான் உரையாடும் போது கட்சிக்குள் நடப்பவை குறித்து அவருக்கு தெளிவில்லை.
தெளிவில்லாத சூழல்
இவ்வாறு கட்சிக்குள் நடக்கும் விடயங்கள் தொடர்பில் அக்கட்சியில் உள்ளவருக்கே தெளிவில்லாத சூழல் அங்கு தொடர்கின்றதை காணக்கூடியதாக உள்ளது.
தமிழ் மக்கள் குறித்து நிறைய பிரச்சினைகள் கிடப்பில் இருக்கும் போது கட்சியின் தலைவர் யார், சுமந்திரன் (M. A. Sumanthiran) கட்சியின் பேச்சாளரா இல்லையா மற்றும் சிறீதரனின் பதவி என அதைப்பற்றி கதைத்துகொண்டிருக்கின்றனர்” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
அத்தோடு, அண்மையில் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் இருந்து சுயேட்சையாக களமிறங்கி நாடாளுமன்றத்திற்கு தெரிவானவருடன் இணைந்து பயணிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்திருந்தார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் இராமநாதன் அர்சசுனா கருத்து தெரிவிக்கையில், “தமிழ் கட்சிகளில் மணிவண்ணனை தவிர்த்து ஒன்றாக சேர்ந்து அரசியலில் பயணிப்பது குறித்து யாரும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவுமில்லை அத்தோடு அது குறித்து நான் சிந்திக்கவுமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |