சபையில் அர்ச்சுனா எம்.பி அதிரடி - ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள்
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதுடன் சபாநாயகரின் செயலை நினைத்து வெட்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அர்ச்சுனா பேசிய தகாத வார்த்தைகளை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்.
இதேவேளை குறுக்கிட்ட இராமநாதன் அர்ச்சுனா தயாசிறி ஜயசேகர பயன்படுத்திய தகாத வார்த்தைகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வார்த்தையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு பிரதி சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |