ஏலியன்கள் உள்ளனவா..! எலான் மஸ்க் அளித்த பதில்
வேற்று கிரகவாசிகள் அதாவது ஏலியன்கள் உள்ளனவா என்பது தொடர்பில் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் தற்போதுவரை அச்சத்துடன் கூடிய சந்தேகம் இருந்த வண்ணம் உள்ளது.
எனினும் இந்த ஏலியன்களின் இருப்பு தொடர்பில் நறுக்கான பதில் அளித்துள்ளார் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க்.
எதற்காக இந்த பதிலை அவர் அளித்துள்ளார் என்பதை விரிவாக பார்க்கலாம்,
மாயமான மலேசிய விமானம்
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8 மலேசியா ஏர்லைன்ஸ் விமானமான MH 370 மலேசிய தலைநகரான கோலாலம்பூரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சீனாவின் தலைநகரான பீஜிங்கை நோக்கி பயணத்தை மேற்கொண்டது. இந்த விமானத்தில் சுமார் 227 பயணிகள் இருந்தார்கள். இவர்களோடு 12 விமான பணியாளர்களும் இருந்தார்கள்.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 38 நிமிடங்களுக்கு பிறகு தெற்கு சீனாவின் கடல் பரப்பிற்கு மேல் பறந்து கொண்டு இருந்தது. அதற்கு பிறகு, இந்த விமானத்தின் தகவல் துண்டிக்கப்பட்டது.அதன்படி மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான MH370 மாயமானதாக அறிவிக்கப்பட்டது.
ஏலியன்கள் விமானத்தை கடத்தியிருக்கலாம்
எனினும் இந்த விமானம் எப்படி மாயமானது என்பது இன்றளவிலும் வினோதமான ஒன்றாக இருந்து வருகிறது. மேலும், அப்போதைய காலகட்டத்தில் ஏலியன்கள் விமானத்தை கடத்தியிருக்கலாம் என பேசப்பட்டது. எனினும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் நடந்து 10 வருடங்கள் ஆகியிருக்கிறது. தற்போது, சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில், இந்த மலேசிய விமானத்தின் டிரோன் காட்சி வைரலாகி வருகிறது. மேலும், இந்த காணொளியில், விமானத்தை ஏதோ ஒன்று சுற்றுவது போலவும் காட்சிகள் காண்பிக்கின்றது.
அந்த வகையில், பயனர் ஒருவர், இந்த காணொளியை பதிவிட்டு, எலான் மஸ்கை டேக் செய்து கருத்து கேட்டார். அதற்கு பதிலளித்து இருக்கிறார் எலான் மஸ்க்.
ஏலியன்கள் இருப்பது தெரிந்திருந்தால்
அப்போது, ஏலியன்கள் இருப்பது தெரிந்திருந்தால் உடனடியாக எக்ஸ் தளத்தில் நான் விஷயத்தை வெளியிட்டு இருப்பேன் என கூறி இருக்கிறார்.
MH370 Drone Video
— Ashton Forbes (@JustXAshton) April 26, 2024
“This thing is flying so close to the plane that it indicates an operation.”
“This is not a metal sphere this is a plasma field around the orb.”
“It’s like their own gravity well that they’re pulling forward.”#MH370x #MH370
pic.twitter.com/z8k2NlRRbf
அதுமட்டுமல்லாது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 6000 செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி செயல்பட்டு வருவதாகவும் இப்போது வரை ஏலியன்கள் இருப்பதற்கான ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என பதில் கொடுத்தார் எலான் மஸ்க்.
செங்கடலில் பதற்றம் : பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் : அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
மேலும், மாயமான மலேசிய விமானம் இன்றளவிலும் மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |