ஆர்ஜென்டினா துணை அதிபர் மயிரிழையில் உயிர் தப்பினார்..! பதறவைக்கும் காணொளி
ஆர்ஜென்டினா துணை அதிபரை சுட முயற்சி
ஆர்ஜென்டினா நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தே கீயர்ச்சனர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் பதிவாகியுள்ளது.
தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு வெளியே செல்லவிருந்த தருணத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து திடீரென்று ஒரு நபர் அருகே வந்து கையில் இருந்த துப்பாக்கியை தலை மீது வைத்து சுட முயற்சித்தார்.
பதறிப்போன துணை அதிபரின் ஆதரவாளர்கள்
ஆனால், அதிர்ஷ்டவாசமாக சுட முயற்சித்த போது துப்பாக்கி சரியாக இயங்கவில்லை என்றும், பதறிப்போன துணை அதிபரின் ஆதரவாளர்கள் அந்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் துப்பாக்கியில் 5 தோட்டாக்கள் லோட் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
துணை அதிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயற்சித்த 35 வயது நபரை காவல்துறை கைது செய்துள்ளதுடன், அவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் எனவும் இவரின் பின்புலம் குறித்து விசாரிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
தேசிய விடுமுறை
இந்தச் சம்பவத்திற்கு அந்நாட்டின் அதிபர் அல்பெர்தோ பெர்னாட்டஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அங்கு தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

