யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025” என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் கச்சாயில் நேற்று முன்தினம் (14) ஆரம்பமாகியுள்ளது.
குறித்த செயற்திட்டத்திற்காக கொழும்பில் இருந்து 150 இயந்திரங்கள், 150 பணியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆளணிப் பற்றாக்குறை
இருப்பினும், ஓர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆகக் குறைந்தது நான்கு பேர் தேவை என்ற அடிப்படையில், ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்களை எதிர்பார்த்துள்ளனர்.
இந்தநிலையில், செயற்றிட்டத்துக்கு தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தனை 0766904580 எனும் தொலைபேசி இயக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிதேச செயலர் பிரிவு
இதனடிப்படையில், இன்று (16) புதன்கிழமை சாவகச்சேரி பிதேச செயலர் பிரிவு குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதனடிப்படையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்டவர்கள் 0776116551 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிலும் (0774409933) 21ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் உடுவில் பிரதேச செயலர் பிரிவிலும் (0779074230) 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிலும் (0778222560) 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிலும் (0771976959) செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

