மீண்டும் ஆரம்பமாகவுள்ள செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு : வெளியான அறிவிப்பு

Jaffna S Shritharan Law and Order chemmani mass graves jaffna
By Sathangani Jul 16, 2025 09:05 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று (15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது: வெளியான அறிக்கை

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது: வெளியான அறிக்கை

 செம்மணி மனிதப் புதைகுழி 

அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் முதலாவதாக அகழ்ந்த புதைகுழியில் 63 எலும்புக்கூடுகளும் அதற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட புதைகுழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

மீண்டும் ஆரம்பமாகவுள்ள செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு : வெளியான அறிவிப்பு | Chemmani Mass Grave Excavation Work Restart Monday

சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகளை செய்து தருமாறு நீதிமன்றினால் கூறப்பட்டதற்கு அமைவாக அது சம்பந்தமான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான சுருக்கமான விபரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது மூன்று விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர்.

மனித புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விரைவில் சிக்கப் போகும் பலர் : அரசின் அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விரைவில் சிக்கப் போகும் பலர் : அரசின் அதிரடி அறிவிப்பு

ஆய்வின் முடிவுகள் 

எஸ் 25 ,எஸ் 48 , எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக முக்கியமானதாக காணப்பட்டது.

உடுப்பு உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக நான்கு தொடக்கம் 5 உத்தேச வயதை கொண்ட சிறுமியினுடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்.

மீண்டும் ஆரம்பமாகவுள்ள செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு : வெளியான அறிவிப்பு | Chemmani Mass Grave Excavation Work Restart Monday

அதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S.Shritharan) ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் மன்று பரிசீலனைக்கு எடுத்தது.

ஏற்கனவே மன்று இட்ட கட்டளைக்கு அமைவாக அகழ்வு பகுதிக்கு விஜயம் செய்கின்ற பொழுது விண்ணப்பம் செய்து விஜயத்திற்கான தன்னுடைய காரணத்தினை வெளிப்படுத்தி நடைமுறையை ஏற்று பின்பற்றப்படுவதாக நீதிவான் எடுத்துச் சொல்லி இருந்தார்.

அதற்கு மேலதிகமாக யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதற்கும் பொறுப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் காலை, மாலையில் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கிரமமான முறையில் ஏற்கனவே அகழ்வாய்வில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிபுணர்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் ஈடுபடுத்துவதற்கும் மன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

செம்மணி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு அனுமதியுங்கள்: சிறீதரன் அவசர கோரிக்கை - நீதிவானின் அறிவிப்பு

செம்மணி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு அனுமதியுங்கள்: சிறீதரன் அவசர கோரிக்கை - நீதிவானின் அறிவிப்பு

சிறீதரனுக்கு அனுமதி 

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சட்டத்தரணியின் பிரசன்னத்துடன் விஜயம் செய்யவும் மன்று அனுமதித்திருக்கிறது.

இப்படியாக அனுமதித்திருக்கிறபோதும் ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் அனுமதித்திருக்கிறது.

மீண்டும் ஆரம்பமாகவுள்ள செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு : வெளியான அறிவிப்பு | Chemmani Mass Grave Excavation Work Restart Monday

தேவையில்லாத கட்டுக்கதைகளையும் புனைகதைகளையும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சான்றாதாரங்கள் சம்பந்தமான பொருட்களையும் மக்கள் மத்தியில் தேவையில்லாத விசனத்தையும் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார். ஆகவே 21ம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்” என தெரிவித்தார்.

குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி