சாணக்கியனுக்காக சபையில் கொந்தளித்த அர்ச்சுனா எம்.பி : சபாநாயகருடன் முற்றிய வாக்குவாதம்
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியணை சபாநாயகர் இடைநிறுத்தியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Archchuna Ramanathan) கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெறும் வாள்வெட்டு குறித்து சபையில் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சபாநாயகர் இடைநிறுத்தி, இது ஒரு ஒழுங்கு பிரச்சினை அல்ல ஆகையால் இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான பிரேரணையாக கொண்டு வந்து பேசலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சாணக்கியனுக்கு இது தொடர்பில் உரையாடுவதற்கு சபாநாயகரால் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்தநிலையைில், குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் “நாடாளுமன்ற உறுப்பினருக்கு முக்கியமான கேள்விகளை கேட்பதற்கு இடமுண்டு, அதேபோன்று நான் கட்சி தலைவராகவும் இருக்கின்றேன்.
ஆகவே, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உங்களுக்கு பொறுப்பு இருக்கின்றது, நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். அங்கு துண்டு துண்டாக மக்கள் வெட்டப்படுகின்றார்கள். அதை இங்கு கூறாமல் எங்கு சென்று கூற முடியும்?
ஆகவே கிழக்கு மாகாணத்தை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்” என அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், மற்றைய உறுப்பினர்களுக்கு நேரம் வழங்கப்படும் போது ஏன் சாணக்கியனுக்கு வழங்கப்படவில்லை என கோரி பாரிய வாக்குவாதம் வலுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
