நீதி கேட்டு ஆதங்கத்தில் நாடாளுமன்றில் கத்திய அர்ச்சுனா எம்.பி
உள்ளூராட்சித் தேர்தலில் எனது குரல் வளையை நெரித்தால் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் தான் பிமல் ரத்நாயக்க நான் கதைக்காத ஒரு விடயத்தை கதைத்ததாக தெரிவித்து 8 நாட்கள் எனது உரையை ஒளிபரப்ப தடை செய்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நான் நினைத்திருந்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கை காட்டாமல் விட்டிருக்கலாம். நான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை.
எனது தனிப்பட்ட நாடாளுமன்ற பதவிகள் பறிபோனாலும் பரவாயில்லை ஏதோ ஒரு தமிழினம் வெல்ல வேண்டும் என நினைத்தேன்.
எங்களுடைய தமிழீழத்தில் ஒவ்வொரு பெண்ணும், இரவு 12 மணிக்கும் துணிந்து நடமாடலாம்.
அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர் 28 கொலைகள் நிகழ்ந்துள்ளது. ஆனால் நாங்கள் ஒரு போதும் பாதுகாப்புக் கோரப்போவதில்லை.
ஒரு நிலையியற் கட்டளையை கேட்டதற்காக ஒரு தமிழனாக என்னை வெளியேற்றியுள்ளார்கள்”என தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
