ஹார்முஸ் ஜலசந்தி வழியான எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்திய எண்ணை நிறுவனங்கள்
மத்தியக்கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள தாக்குதல்களுக்கு மத்தியில், சில உயர்மட்ட எண்ணெய் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"தங்கள் கப்பல்கள் பல நாட்கள் அங்கேயே இருக்கும்," என்று ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரேபிய தீபகற்பத்திற்கும் ஈரானுக்கும் இடையில் செல்லும் இந்த நீர்வழிப்பாதை வழியாக சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் பிற எரிபொருள் வகைகள் பயணிக்கின்றன.
முக்கிய எண்ணெய் நிறுவனங்கள்
இதன்மூலம் முக்கிய எண்ணெய் நிறுவனங்களும் வர்த்தக நிறுவனங்களும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுப்பப்படும் பப்பல்களை முறையான இடைநிறுத்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இந்த ஒருங்கிணைந்த அறிவிப்பானது, தனிப்பட்ட விநியோகத்தர்கள் இந்த வழியைத் தவிர்ப்பதை அதிகப்படுத்தியுள்ளது.
இது மூலோபாய நீர்வழி வழியாக எரிசக்தி போக்குவரத்து பாதுகாப்பு குறித்த பரவலான தொழில்துறை கவலையை எழுப்பியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |