மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல் : சிறிலங்கன் விமான சேவைக்கும் சிக்கல்

United States of America Iran Iraq
By Sathangani Feb 28, 2026 10:41 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

புதிய இணைப்பு

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான சிறிலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என சிறிலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறிலங்கன் விமான சேவைகள் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கின் பல நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டுள்ளமையால் விமானச் சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விமானச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும் சில விமானங்கள் சவுதி அரேபிய வான்பரப்பு ஊடாக மாற்று வழிகளில் இயக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன.

அதன்படி ஈரான், ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்களது வான்பரப்புகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அந்நாட்டு வான்பரப்பு ஊடான அனைத்து விமானப் போக்குவரத்துகளும் உத்தியோகபூர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானியத் தலைநகரில் 3 பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற உடனேயே, எர்பில் (Erbil) சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதாக அந்த அதிகாரசபை அறிவித்துள்ளது.

கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை

கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் பின்னணியில், இஸ்ரேல் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தெஹ்ரான் நகரில் மூன்று வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைகளும் இணைந்துகொண்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்

கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்

தாக்குதலின் முடிவு உங்கள் கைகளில் இல்லை! அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தாக்குதலின் முடிவு உங்கள் கைகளில் இல்லை! அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025