அர்ச்சுனா எம்.பிக்கு கொலை மிரட்டல்: சபையில் பகிரங்கம்
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் உணவகத்தில் இன்று (21) இவ்வாறு அச்சுருத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அர்ச்சுனா புத்தளம் அடிப்படை மருத்துவமனை குறித்து 11 கேள்விகளை முன்வைத்திருந்தார்.
மக்கள் சேவை
குறித்த வைத்தியாசலையின் நிர்வாகம் மற்றும் மக்கள் சேவை தொடர்பில் குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த மருத்துவமனை தொடர்பில் அவர் கேள்வி எழுப்பிய பிறகு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |