சாதாரணதர பரீட்சை -காவல்துறை தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், ஒவ்வொரு பரீட்சை நிலையத்திலும் ஒரு காவல் அதிகாரி மற்றும் இரண்டு காவல்துறை உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறைதலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பரீட்சார்த்திகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பதற்காக நடமாடும் காவல்துறை ரோந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை (23ஆம் திகதி) முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை 3844 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இரகசிய ஆவணங்களை எடுத்துச் செல்வதற்காக 378 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களத்தில் காவல் நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
