அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் 17 வயது சிறுவனால் பரபரப்பு!
அவுஸ்திரேலியாவில் (Australia) விமானம் ஒன்றில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நுழைய முயன்ற 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
160 பயணிகளுடன் மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு புறப்படவிருந்த ஜெட்ஸ்டார் (Jetstar) விமானத்திலேயே நேற்றையதினம் (06) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஊடுருவிய விதம்
இதன்போது, துப்பாக்கியுடன் விமானத்திற்குள் நுழைய முயன்ற சிறுவன், ஊழியர்கள் மற்றும் பயணிகளால் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து, விமான நிறுவன ஊழியர்கள், சிறுவனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவலோன் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வேலியில் இருந்த ஒரு துளை வழியாக குறித்த சிறுவன் விமான நிலையத்திற்கு ஊடுருவியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
வாகனம் கண்டுபிடிப்பு
அத்தோடு, சந்தேகநபரான சிறுவனுக்கு சொந்தமான மேலும் இரண்டு பைகள் மற்றும் வாகனம் ஒன்றையும் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த சிறுவனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், சிறுவனால் விமானத்தில் இருந்த சுமார் 160 பயணிகளில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

