வடகொரியாவிடமிருந்து ஆயுத கொள்வனவு - பசிலுக்கு பொன்சேகா பதிலடி
sarath fonseka
north korea
weapon
basil rajapaksha
By Sumithiran
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்தை அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
போரின்போது இலங்கைக்கு தேவையான ஆயுதங்கள் முக்கியமாக சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் கறுப்பு சந்தையில் இருந்து டொலர்களை பெற்றுக்கொண்டு வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக அண்மையில் நிதியமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
