இராணுவ சீருடையை ஒத்த உடையை வைத்திருந்த இலங்கையர் கைது
வீடான்றின் காணியில் இராணுவ உடையை ஒத்த பொருட்களை பரல் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை - சவளக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சொறிக்கல்முனை வீரச்சோலை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரு வேறு வகையிலான இராணுவ உடைகள் அடங்கிய பொருட்கள் உட்பட 2 தோட்டாக்கள் மற்றும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பரல் மீட்கப்பட்ட பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் சவளக்கடை பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அண்மையில் சீன இராணுவ சீருடையை ஒத்த உடையணிந்து திஸ்ஸமஹாராம குளத்தை ஆழப்படுத்தி புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வெளிக்கிளம்பிய நிலையில், இவரது கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.