துப்பாக்கி ரவைகளுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு நுழைய முயன்ற நபர்
By Thulsi
துப்பாக்கி ரவைகளை தனது பையில் மறைத்துக் கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயத்தை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றியவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள்
சந்தேகநபர் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றியவர் எனவும், கடந்த 20ஆம் திகதி விடுமுறையில் லுணுகம்வெஹரவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மீண்டும் கடமைக்காக திரும்பியபோது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள், ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் வைத்து குறித்த சிப்பாயின் பயணப் பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, பைக்குள் T-56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி