யாழ்ப்பாணத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு
Jaffna
Army firing
Sand smuggling
driver arrested
By MKkamshan
யாழ். கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் கடத்தல் காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டார்.
உழவு இயந்திரமும் அதன் சாரதியும் கொடிகாமம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



