காவல்துறை அதிகாரியின் கையை கடித்த இராணுவ வீரர் கைது!
அனுராதபுரத்தில் காவல்துறை அதிகாரியின் கையை கடித்து காயம் ஏற்படுத்திய இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் ஹிரிபிட்டியாவ பொது மைதானத்தில் நேற்று மாலை இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியை காண மைதானத்திற்கு சென்றிருந்தவர்களில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையை சமாதானம் செய்ய சென்ற போதே இராணுவ வீரர், கல்னேவ காவல் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியின் இடது கையை கடித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரி கல்னேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரரும், காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹோமாகமை பிரதேசத்தை இந்த சந்தேக நபர், இலங்கை இராணுவத்தின் அரலகங்வில இராணுவ முகாமில் பீரங்கி படைப்பிரிவில் சேவையாற்றி வருகிறார்.
