தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இராணுவ வீரர்! யாழில் சம்பவம்
Sri Lanka Army
Sri Lanka Police
Jaffna
By pavan
யாழில் கருவாடு உலர விட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவரின் கழுத்தில் இராணுவ வீரர் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரைநகர் சாம்பல் ஓடை கடற்கரையில் நேற்று (23) வியாழக்கிழமை கருவாட்டினை தொழிலாளி ஒருவர் உலர வைத்துக்கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தொழிலாளி, காரைநகர் கடற்தொழிலாளர் சங்கத்திற்கும், அப்பகுதி கிராம சேவையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
குறித்த சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாகபவும், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாகவும் காரைநகர் கடற்தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்