மாணவியை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ சிப்பாய் கைது
Sri Lanka Army
Sri Lanka Police
By Sumithiran
17 வயது பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதாக அச்சுறுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ சிப்பாய் பணிபுரியும் மின்னேரிய இராணுவ முகாமின் மூன்றாவது பொறியியல் சேவை தலைமையகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் குழுவொன்று சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாயை கைது செய்து கட்டுகஸ்தோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அநுராதபுரத்தை சேர்ந்தவர்
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் அனுராதபுரம் புருந்தங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்