மன்னாரில் பனை மரத்துடன் மோதியது இராணுவ வாகனம் : இராணுவ வீரர் பலி
Sri Lanka Army
Mannar
Accident
Death
Nalinda Jayatissa
By Independent Writer
Courtesy: nayan
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இன்று மாலை 5.15 மணி அளவில் இராணுவ வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இராணுவ வீரர்கள் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களை சுகாதார அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தலைமன்னாரிலிருந்து மன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ டிஃபென்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் டிஃபென்டர் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்