புடினுக்கு பேரிடியை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு! துபாயை அதிர வைத்த கைது
ரஷ்ய இராணுவ புலனாய்வுப் பிரிவின் துணைத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் படுகொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 6 ஆம் திகதி மொஸ்கோவில் உள்ள ஜெனரலின் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் அவர் பலத்த காயமடைந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது குணமடைந்து வருகிறார் என கூறப்படுகிறது.
புலனாய்வு நடவடிக்கை
விளாடிமிர் அலெக்ஸீவ் ரஷ்ய புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் நிலைத் தளபதி ஆவார், மேலும் உக்ரைன்-ரஷ்ய போரின் போது ரஷ்ய புலனாய்வு நடவடிக்கைகளை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை நடத்திய தொடர்புடை சந்தேகநபர் துபாயில் கைது செய்யப்பட்டு ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உக்ரைனிய உளவுத்துறைகள் அல்லது ரஷ்யாவின் உள் அதிகாரப் போட்டிகளே காரணமாக இருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |