உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரிக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் அதிபரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் என மனோ கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை அறிய
"ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை அறிய முழு உலகமும் காத்திருக்கிறது. எனவே, அனைத்து விவரங்களையும் சிறிசேன வெளிப்படுத்த வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஏற்கனவே முறைப்பாடு
சிறிசேனவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
“முன்னாள் அதிபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து இலங்கையில் உள்ள தேவாலயத் தலைவர்களுடன் ஏற்கனவே பேசிவிட்டதாக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |