பயங்கரவாத தடை சட்டத்தில் சொல்லிசை பாடகர் கைது : அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் அறிவிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே அண்மையில் கைதான கிளிநொச்சி இளைஞன் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்’’ என ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்
அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் கூறுகையில், ‘‘விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு செயற்பாடு களுக்கும் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

எனினும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமையுள்ளது.
விடுதலைப் புலிகள் தொடர்பில் பாடல் பாடி, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தமைக்காகவே கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞன் கைது தொடர்பில் காவல்துறை மா அதிபர், சட்ட மா அதிபருடன் இன்றைய தினம் (நேற்று) கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இதன் பின்னர் சாதகமான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்’’ என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 4 மணி நேரம் முன்