சீனாவிலிருந்து வந்த துப்பாக்கி மற்றும் வாள்! ரகசிய தகவலால் சிக்கிய மூவர்
srilanka
arrest
police
By Vasanth
சீனாவில் தயாரிக்கப்பட்ட 12 துளை துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் அலுமினிய கவசங்களுடனான நான்கு வாள்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொஸ்கொட பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவு இந்த சோதனையை நடத்தியது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை பலபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.