உத்தரவுக்கமைய அதிகாரிகளை கைது செய்யவும் - றம்புக்கண சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர்
Police spokesman
Sri Lanka Police
Rambukkana
Rambukkana Shooting
Rambukkana Protest
By Kanna
றம்புக்கண துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை கைது செய்வதில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காவல்துறைமா அதிபர் உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி றம்புக்கணயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரி உட்பட அதனை செயற்படுத்தி அனைத்து அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்யுமாறு கேகாலை மேலதிக நீதிவான் நேற்று உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டில் 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை கொல்லப்பட்டதுடன், 15 காவல்துறை அதிகாரிகள் உட்பட 27 பேர் காயமடைந்தனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி