பிரதமர் பதவி பறிபோனது: கடும் கவலையில் நேபாள முன்னாள் பிரதமர்
நேபாள பிரதமர் பதவியில் இருந்து விலகியதற்கு அயோத்தி கோயிலுக்கு எதிரான நிலைப்பாடு, லிபுலேக் பிரச்சனை ஆகியவையே காரணம் என பிரதமர் பதவியில் இருந்து விலகிய கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து விலகிய கே.பி.சர்மா ஒலி இராணுவ பாதுகாப்பில் உள்ளார். அவர் கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
நான் பதவியில் நீடித்து இருந்திருப்பேன்
லிபுலெக் பிரச்சனையை உரிமை கொண்டாடாமல் இருந்து இருந்தால் நான் பதவியில் நீடித்து இருந்திருப்பேன். கடவுள் ராமர் குறித்து நான் தெரிவித்த கருத்தால் எனது பதவி பறிபோனது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் சிக்கிம், மேற்கு வங்கம், பீஹார், உபி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. உத்தரகாண்டின் லிபுலெக் பகுதியை நேபாளம், ' எங்களுக்கு சொந்தமானது' என உரிமை கொண்டாடி வருகிறது. இதனை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
