வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய உத்தரவு!
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த விடயத்தை வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட காவல்துறை பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் காவல் நிலையத்தில் நேற்று (30.06) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
காவல்துறையினரின் கோரிக்கைகள்
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய சிசீரிவியின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா தலைமை காவல் நிலைய காவல்துறையினர், குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் மேயர் உள்ளிட்ட சிலரை கைது செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை இன்று (01-07-2026) கோரி இருந்தனர்.

இதன்போது காவல்துறையினரின் கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்திய வவுனியா நீதவான் நீதிமன்றம் வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் சு.காண்டீபன் உட்பட நான்கு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்