ஞானசார தேரர் மீதான பிடியாணை : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Colombo Sri Lanka Law and Order
By Shalini Balachandran Dec 23, 2024 02:13 PM GMT
Report

இஸ்லாத்தை அவமதித்த மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலபட அத்தே ஞானசார தேரரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவு இன்று (23) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஞானசார தேரர் ஆஜராகாத காரணத்தினால் மேலதிக நீதவான் பசன் அமரசேனவினால் இந்த பிடியாணை கடந்த 19 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது, ஞானசார தேரர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (23) முன்னிலையானார்.

சஞ்சய் ஆரியதாசவின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இசுரு எதிரிசிங்க, வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருந்த கடந்த 19ஆம் திகதி சந்தேகநபர்,உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்ததால் நீதிமன்றில் முன்னலையாக முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதலாவது தேசிய மாநாடு

கொழும்பில் நடைபெற்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதலாவது தேசிய மாநாடு

தண்டனைக்குரிய குற்றம்

அவர் மீண்டும் வைத்தியசாலையில், செவ்வாய்க்கிழமை (24) அனுமதிக்கப்படுவார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் மீதான பிடியாணை : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Arrest Warrant Venerable Gnanasara Thero Withdrawn

2016 ஜூலை எட்டு, அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​இஸ்லாம் தொடர்பான அறிக்கை மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும், அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், பிடியாணையை மீள அழைப்பதுடன், சந்தேக நபரை ஜனவரி ஒன்பதாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா எலோன் மஸ்க் : ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா எலோன் மஸ்க் : ட்ரம்ப் அளித்த பதில்

இலங்கைக்கான ஸ்டார்லிங் நிறுவன சேவை குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கான ஸ்டார்லிங் நிறுவன சேவை குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020