கிடைத்தது சர்வதேச உதவி! பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று, அந்நாடுகளில் இருந்து இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி வரும் 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர்வதேச காவல்துறை இதுவரை சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் நிற அறிவிப்புகளை அனுப்பியுள்ளது.
அதன்போது, 199 சிவப்பு அறிவிப்புகள், 90 நீல அறிவிப்புகள் மற்றும் 4 மஞ்சள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் தற்போது காவல்துறைக்கு கணிசமான சர்வதேச உதவி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச் செல்வதற்கான வாய்ப்பு
இந்த நிலையில், அண்மையில் வெளிநாடுகளில் உள்ள 19 குற்றவாளிகள் இந்த நாட்டிற்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த செயல்முறை தீவப்படுத்தப்படுவதால் இந்த நாட்டில் உள்ள குற்றவாளிகள் மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும் என்று சிறிலங்கா காவல்துறை எதிர்பார்த்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
