சட்டவிரோத தொழில் - விசாக் காலம் நிறைவு - தாய்லாந்து பெண்கள் 15 பேர் கைது!
கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த தாய்லாந்து பெண்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே குறித்த தாய்லாந்து பெண்கள் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த பெண்கள் கொழும்பை அண்மித்த கல்கிஸை மற்றும் கொள்ளுப்பிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள மசாஜ் நிலையங்களில் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட தாய்லாந்து பெண்கள்
கைது செய்யப்பட்ட தாய்லாந்து பெண்கள் 15 பேரில் நால்வரின் விசா காலம் நிறைவடைந்துள்ளதாகவும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இவர்களில் சிலர் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணைகள் முடிவடைந்து, நாட்டை விட்டு இவர்களை அனுப்பும் வரை வெலிசறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

