மே 9 கலவரத்தில் ஆர்ப்பாட்டகாரர்களை தாக்கிவிட்டு வெளிநாடு தப்பிசெல்ல முயன்றவர் கைது
சந்தேகநபர் கைது
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர், காலிமுகத்திடல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தேடப்பட்டு வந்த, வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ள ஒருவரே, மலேசியாவிற்கு செல்வதற்காக நேற்றிரவு விமான நிலையத்திற்கு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்
3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணை
43 வயதான அவர் மத்தேகொட பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவராவார்.
சந்தேகநபர் இன்று (11) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
