நுணுக்கமான முறையில் போதைப்பொருள் விற்பனை - மூவர் கைது!
Sri Lanka Police
Batticaloa
International day against Drug abuse & Illicit Trafficking
Drugs
By Beulah
காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (02) ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்துள்ளார்.
பிரதான வீதியில் பலாப்பழம் விற்பனை செய்யும் இருவர் மற்றும் புதிய காத்தான்குடி நூறாணியா பிரதேசத்தில் வைத்து மற்றொருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவரிடமுமிருந்து சுமார் 280 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செயப்பட்டுள்ள நபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தீதில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
