காவந்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம்: சந்தேகநபர் கைது!
காவந்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், எஹெட்டுவெவ பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையினரும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினரும் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சந்தேகநபரின் வீட்டிலிருந்து 12 போர் ரக துப்பாக்கி ஒன்று, 'கெப் துப்பாக்கி' ரக துப்பாக்கி ஒன்று மற்றும் 24 தோட்டாக்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர் இதற்கு முன்னர் 'டயானா' என அழைக்கப்பட்ட யானையொன்றுக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். வனவிலங்கு வளங்களையும் தேசிய மரபுரிமைகளையும் அழிக்கும் இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இணைந்து தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |