தமிழர் பகுதியில் புதையல் - இராணுவ வீரர் உட்பட நால்வர் கைது
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேரை முல்லைத்தீவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுமாத்தளன் கடற்கரையினை அண்டிய பகுதியில் நால்வர் நிலத்தினை தோண்டிக்கொண்டிருந்த வேளை இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
ஒய்வுபெற்ற படைவீரர்
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு காவல்துறையினர் நால்வரையும் கைதுசெய்துள்ளதுடன் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி மற்றும் சவல் என்பனவற்றையும் மீட்டுள்ளார்கள்.
இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி முழங்காவில் பகுதியினை சேர்ந்த மூவரும் மற்றும் தென்பகுதியினை சேர்ந்த ஒய்வுபெற்ற படைவீரர் ஒருவரும் என இனம் காணப்பட்டுள்ளது.
மேலும், இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
