யாழ்குடாநாட்டில் வீடுடைத்து களவாடிய மூவர் கைது ( படங்கள்)
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்குடாநாட்டில் வீட்டை உடைத்து வீட்டுத் தளபாடப் பொருட்களை களவாடிய மூவரை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இணுவில் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை இன்றைய தினம் கைது செய்துள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீட்டை உடைத்து திருட்டு
யாழ். சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன.
அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி காவல்துறையினர் இணுவில் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த மூவரை கைது செய்துள்ளதோடு களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர்.
கைதானவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்