முன்னாள் அரசியல் தலைமைகளின் ஆடம்பர வீடுகளுக்கு அமைச்சர் விஜயம்
Jaffna
Sri Lanka
Ramalingam Chandrasekar
By Shalini Balachandran
முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய ஆடம்பர வீட்டுத்தொகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விஜயம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் (Ananda Wijepala) நேற்று (08) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) - 07 பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர்கள் குடியிருந்த ஏராளமான ஆடம்பர வீட்டுத் தொகுதிகள் தற்போதைக்கு கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
கண்காணிப்பு
இந்தநிலையில், குறித்த வீட்டுத் தொகுதிகள் அமைந்துள்ள பிரதேசங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு பயணமொன்றை அவர் மேற்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில், கொழும்பு-07 கெப்பிட்டிபொல மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதிகளை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
குறித்த பயணத்தில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்