யாழில் காரும் - மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
Jaffna
Sri Lanka
Accident
By Shalini Balachandran
யாழில் (Jaffna) மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளும் மற்றும் காரும் ஒன்னுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை
இந்தநிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்