இறுதி தருவாயில் மகிந்தவுக்கு அழைப்பு விடுத்த லசந்த: மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க (Lasantha Wickramatunga) இனம்தெரியாத ஆயுத்தாரிகளால் சுட்டுகொல்லப்பட்டார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று காலை 10.45 மணியளவில் அவர் பயணித்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்து அவர் வெளியில் தூக்கி எறியப்பட்டு அவர் சுட்டுகொல்லப்பட்டார்.
இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மூன்று மணிநேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தான் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) லசந்த விக்ரமதுங்க தொலைபேசி அழைப்பொன்றை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், குறித்த அழைப்பிற்கு மகிந்த ராஜபக்ச பதிலளித்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மகிந்த ராஜபக்ச, லசந்த விக்ரமதுங்கவின் அழைப்பை புறக்கணிக்கத்தமையின் பின்னால் மறைந்திருக்கும் காரணம் என்ன என ஒரு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்தும் பலதரப்பட்ட கேள்விகள் வெளியாகி இருந்தது.
காரணம், மாட்டைச் சுடும் துப்பாக்கியால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க சுட்டுகொல்லப்பட்டிருந்தார்.
நவீன கர துப்பாக்கிகள் காணப்பட்ட போதிலும் அவர் எதற்காக மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்டார் என்பது மிகவும் மர்மாகவும் பரதரப்பட்ட சந்தேகத்தை அவரது படுகொலை சம்பவத்தில் தோற்றுவிக்கும் ஒரு முக்கிய விடயமாக காணப்பட்டது.
இதற்கான விரிவான காரணம், படகொலைக்கு பின்னால் மறைந்திருக்கும் அரசியல், படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகள் மற்றும் பலதரப்பட்ட விடங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
