பாதாள உலகத்துடன் தொடர்புடைய 20 அரசியல்வாதிகள்! வெளியாகவுள்ள அறிக்கை
இருபதுக்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல்வேறு பிரமுகர்கள் தொடர்பான தகவல்களை, புகைப்படங்களுடன் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையில், பாதாள உலக நபர்களுடனான ஒப்பந்தங்கள் தொடர்பாக பல்வேறு அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இந்த நாட்களில் அரசியல் அரங்கில் ஒரு தீர்க்கமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
பாதாள உலக நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் இன்று பல்வேறு விளக்கங்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனந்த விஜேபால
இதன் காரணமாக, நாடாளுமன்றம் இன்று சூடான விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் பாதாள உலக நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலக நபர்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள், சமூக ஊடகங்களில் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களால், பாதிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை பத்திரிகை ஊடகங்கள் விளக்கமளித்துள்ளன.
இந்த பாதாள உலக நபர்கள் சில அரசியல்வாதிகளுடன் கொண்டிருந்த ஆரம்பகால தொடர்புகள் குறித்து பல விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளதாகவும் முன்னதாக பொதுபாதுபகாப்பு அமைச்சர் கூறியிருந்தார்.
இருப்பினும், விசாரணைகள் முடியும் வரை முழு விவரங்களையும் வெளியிட முடியாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
