பிரித்தானியாவில் கடல்வழி குடியேறிகள் இன்று முதல் கைது: அதிரடித்திட்டம் நடைமுறையில்!
பிரான்சின் கடற்கரைகளில் இருந்து சிறிய சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் சட்ட விரோத குடியேறிகளை கைதுசெய்து மீண்டும் பிரான்சுக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கை இன்று முதல் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடியான புதிய முறையால் இன்று முதல் பிரித்தானியாவுக்கு கடல்வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்கள் கைதுசெய்யப்படும் நிலைமை எழுந்துள்ளது.
கடந்த மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட அரசு முறை பயணயத்தின் போது எட்டப்பட்ட கொண்ட வன்-இன், வன்-அவுட் (one-in, one-out) ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முக்கிய நோக்கம்
ஆட் கடத்தல் வலையமைப்புகளால் மேற்கொள்ளப்படும் ஆபத்தான படகுப்பயணங்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த நடைமுறையில் சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவை சென்றடைந்தவர்களின் புகலிடக் கோரிக்கைகள் உடனடியாகவே நிராகரிக்கப்படும்.
இதற்குப்பதிலாக சிறப்பு நடவடிக்ககையில் இணையம் மூலம் விண்ணப்பிப்பவர்களை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளும், இந்த நடவடிக்கையில் கடத்தல்காரர்களால் குறிவைக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும், பிரித்தானியாவுடன் தொடர்பு கொண்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என இரண்டு அரசாங்கங்களும் குறிப்பிட்டுள்ளன.
இன்றிலிருந்து பிரித்தானியாவுக்கு கடல்வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படும் நிலைமை எழுந்துள்ளதால் சட்டவிரோதமாக பிரித்தானியாக்குள் நுழைவர்களை பிரான்சுக்குத் திருப்பி அனுப்ப முடியாது என்ற கருத்தை முடிவுக்குவருவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடத்தும் நகர்வு
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்கான இந்த புதுமையான அணுகுமுறைக்கு ஐரோப்பிய ஆணையகமும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் பிரான்சின் வடபகுதியில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், பிரித்தானியாவுக்கு மிகவும் சாதகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிதானியாவில் குடியேறிகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நைஜல் பராஜின் சீர்திருத்த பிரித்தானிய கட்சி அண்மைய தேர்தல்களில் அதிக ஆதரவை பெற்றுவருவதால் புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்தும் நகர்வில் தொழிற்கட்சி அரசாங்கம் முனைப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா
