விடுதலைப் புலிகளின் தலைவர் வந்ததாக கூறி தீ வைப்பு
நாட்டில் சமீப காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதேநேரம் அந்த குற்றச் செயல்கள் தவறாக சோடிக்கப்பட்டு வேறு ஒரு தரப்பினர் மீது சுமத்தப்படும் கலாசாரம் இன்று இலங்கையிலும் உருவெடுத்துள்ளது.
அவ்வாறான ஒரு சம்பவம் தற்போது தென்னிலங்கை ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒரு தீ விபத்து சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகவும் அவரை தீயிட்டு கொளுத்தவே தீ வைத்ததாகவும் நபர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மஹரகம நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி உட்பட பல நிறுவனங்களைக் கொண்ட கட்டிடத்தின் பாதுகாவலர் ஒருவரே இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மஹரகம நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நேற்று (19) விடுமுறை நாள் என்பதால், ஒரு தனியார் வங்கி உட்பட பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வழங்குவதற்காக சந்தேக நபர் மட்டுமே கட்டிடத்தில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பிற்பகல் 2.30 மணியளவில், பாதுகாப்பு காவலர் நிறுத்தப்பட்டிருந்த காவலர் இல்லத்தில் பிரபாகரன் தங்கியிருந்ததாகவும், அவரை கொளுத்துவதற்காக தீ வைக்க எரியக்கூடிய திரவம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்தில் காவலர் இல்லத்தில் இருந்த ஒரு படுக்கை, ஒரு மேஜை, ஒரு நாற்காலி, பல புத்தகங்கள் மற்றும் பாதுகாப்புக் காவலரின் துணிகள் மட்டுமே முற்றிலுமாக எரிந்து நாசமானதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து, கோட்டை நகரசபை தீயணைப்புத் துறையின் பொறுப்பதிகாரி ஜி.டி.டி.பி. உட்பட எட்டு அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்துள்ளனர்.
இதையடுத்து, சந்தேக நபரை கைது செய்யப்பட்டு விசாரித்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அங்கு தங்கியிருந்ததால் தான் அந்த அறைக்கு தீ வைத்ததாக அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது போன்ற சம்பவங்கள் நாடு சீர்கேடான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 20 April, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
