மருத்துவ பீட மாணவர் மீதான தாக்குலின் பின்னணியில் இராஜாங்க அமைச்சர்
ragama
attack
medical student
By Sumithiran
இன்று காலை ராகம மருத்துவ பீட விடுதியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் அரச வாகனங்களில் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலின் பின்னர் குண்டர்கள், வாகனம் ஒன்றை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த வாகனம் தென்னை அபிவிருத்தி சபைக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது.
குண்டர்களில் ஒருவர் மாணவர்களால் பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவரது உத்தியோகபூர்வ அடையாள அட்டையில் அவர் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் தனிப்பட்ட ஊழியர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க மீது மட்டை தாக்குதலை நடத்தியவர்கள் படைப்பிரிவு குண்டர்கள் என விஜித ஹேரத் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
